சீனா காரன் மாமல்லபுரத்துக்கு வந்தான்! “பன்றிக்கு நன்றி சொல்லி” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

  0
  9
  #PanrikkuNandriSolli

  இயக்குநர் பாலா அரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’.  புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தை ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.

  இயக்குநர் பாலா அரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’.  புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தை ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார். விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன்  வெளியிடுகிறார். 

  பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதைக்கரு. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த பல்வேறு சுவாரஸ்யங்களுடன் நகர்கிறது பன்றிக்கு நன்றி சொல்லி.

  Panrikku Nandri Solli

  பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்னர் கதாநாயகன் சிலை கண்டுபிடிப்பாரா? பன்றிக்கு என்ன தொடர்பு என்பதை விளக்குகிறது முழு நீளப்படம். இப்படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இப்படம் வரும் ஜூலை 2 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.