சீனாவை பின்பற்றி மும்பையிலும் முழு அடைப்பு!  – சிவசேனாவின் சாம்னா வலியுறுத்தல்

  0
  4
  mumbai-shut-down

  சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, “மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே இங்குதான் அதிகம். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மும்பையில் முழு அடைப்பு கொண்டுவரும் திட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகிறார்

  மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நிறுத்த மும்பையில் முழு அடைப்பு அமல்படுத்துவதுதான் தீர்வு என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் கட்டுரை வெளிவந்துள்ளது.

  uddhav-thackeray

  சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, “மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே இங்குதான் அதிகம். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மும்பையில் முழு அடைப்பு கொண்டுவரும் திட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகிறார். கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக அரசு எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் அனைவரும் சீனாவின் வுகான் நகரைப் பார்க்க வேண்டும். அந்த நகரத்தில் 4000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். வுகான் நகரம் எப்படி மூடப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் வுகானில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரே ஒருவருக்குத்தான் கொரோனா பாஸிடிவ் கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.