சீனாவில் ரஜினி படம் வெளியாவதில் சிக்கல்? குழப்பத்தில் படக்குழு!

  0
  2
  ரஜினிகாந்த்

  ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் சீனாவில் தாமதமாக வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சென்னை: ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் சீனாவில் தாமதமாக வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியான படம் 2.0. பிரமாண்டா இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. அதையடுத்து இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. 

  இதற்கிடையில் இந்த படத்தை சீன மொழியில் ஹெச்ஒய் மீடியா நிறுவனம் வெளியிட முடிவு செய்த்து. ஒரே நேரத்தில் 50,000 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்தனர். தற்போது இந்த முடிவிலிருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. 

  rajini

  அதற்கு காரணம், சமீபத்தில் சீன மொழியில் வெளியான பேட்மேன் திரைப்படம், எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே லாபம் அடையமுடிவும் என்ற சூழலில் உள்ளது. மேலும், ‘2.0’ வெளியாகும் சமயத்தில் ‘தி லயன் கிங்’ படமும் வெளியாகவுள்ளதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.