சீனாவில் நாய், பூனை இறைச்சியை உண்ண தடை! மீறினால் ரூ.16 லட்சம் அபராதம்

  0
  4
  நாய், பூனை

  சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இதனால் உலகம் முழுவதும் 9, 35,957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47, 245 பேர் பலியாகியுள்ளனர்.

  சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இதனால் உலகம் முழுவதும் 9, 35,957 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47, 245 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரேசில், இந்தியா என  200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிக்கின்றனர். கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்துதான் மனிதனுக்கு பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சீனாவிலேயே முதலாவதாக ஷென்சன் நகரில் நாய், பூனை ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு கடும் அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  நாய், பூனை

  சீனாவின் தெற்கு காங்டாங் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஷென்சன். நாய், பூனை ஆகியவற்றின் இறைச்சியைச் சாப்பிட தடை விதித்து இந்த நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் இந்திய மதிப்பில் 16 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், மே ஒன்றாம் தேதி முதல் வனவிலங்குகளான பாம்பு உள்ளிட்டவற்றையும், பல்லி, ஓணான் போன்றவற்றையும் வளர்க்கவும், விற்கவும், உண்ணவும் தடை அமலுக்கு வருவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சீனாவில் இதுபோன்ற விலங்குகளை உண்பது அதிகரித்த நிலையில், அதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில், சீனாவிலேயே முதல்முறையாக ஷென்சன் நகராட்சி தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை