சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

  0
  6
  coronavirus

  சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

  பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

  சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அந்நாட்டில் மட்டுமில்லாமல் உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த வைரஸ் தலைகாட்ட தொடங்கியுள்ளது. சீனாவில் இருந்து செல்பவர்கள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் வவ்வால்களை அதிகமாக உண்ணும் சீன கட்டுவிரியன் பாம்புகள் மூலம் கொரோனா வைரஸ் காய்ச்சல் உருவானதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

  virus

  இந்நிலையில், சீனாவில் நேற்று காலை மட்டும் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதேபோல இன்றும் 15 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.