சீனாவிலிருந்து புதுக்கோட்டை வந்த நபர் திடீர் மரணம்…மக்கள் அச்சம்!

  0
  9
  சக்திகுமார்

  அவர் இறப்பிற்கு  நுரையீரல் பாதிப்பு  மற்றும் மஞ்சள் காமாலை தான் காரணம்  என்று சொல்லப்பட்டது. 

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4 ஆம் தேதி சீனாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் இறப்பிற்கு  நுரையீரல் பாதிப்பு  மற்றும் மஞ்சள் காமாலை தான் காரணம்  என்று சொல்லப்பட்டது. 

  ttn

  இருப்பினும் சக்திகுமார் சீனாவிலிருந்து திரும்பியவர் என்பதே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் இறப்பிற்கு பிறகு தான் தெரியவந்துள்ளது.  சீனாவிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. 

  ttn

  பொதுவாக சீனாவிலிருந்து இந்தியா திரும்பும் நபர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில் சக்திகுமார் குறித்த தகவல் அறியாத அதிகாரிகள், அவரின் திடீர் மரணம் அப்பகுதிவாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.