சீனாவிலிருந்து சென்னைக்கு வந்த கப்பலில் பூனை…அதிகாரிகள் அதிர்ச்சி!

  0
  7
  கொரோனா வைரஸ்

  மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.

  கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 

   

  ttn

  கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்ட  அறிக்கையில் சீனாவில் தங்கியிருப்போருக்கு இந்தியா வர தடை விதித்தது. மேலும், ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.

  ttn

  இந்நிலையில் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி வந்த அந்த கப்பலில் பொம்மைகள் நிரம்பியிருந்த கன்டெய்னரில்  பூனை அதற்கான கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட அதிகாரிகள் பூனைக்கு கொரோனா தாக்குதல் இருக்குமா என்று சந்தேகித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பூனையை அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் கப்பலில் வந்த பொருட்களை திரும்பியனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.