சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு!

  0
  1
  கோப்புப்படம்

  இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கட்டப்பட்டுள்ள முதல் பெரிய ரயில் பாதை கட்டுமான திட்டமான இத்திட்டம், சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது

  கொழும்பு: சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் இன்று திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

  இலங்கை தென் மாகாணத்தின் மாத்தறை முதல் பெலியத்தை வரையிலான புதிய ரயில் பதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 26.75 கி.மீ வரையிலான இந்த ரயில் பாதை திட்டத்தின் மூலம், தென் மாகாணங்களில் பணிகள் போக்குவரத்து அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  srilanka rail

  இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கட்டப்பட்டுள்ள முதல் பெரிய ரயில் பாதை கட்டுமான திட்டமான இத்திட்டம், சீன அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன், சீன தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் இந்த ரயில் பாதையை கட்டமைத்துள்ளது.

  சுமார் 278 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மாத்தறை முதல் பெலியத்தை வரையிலான புதிய ரயில் பாதை திட்டம் இன்று திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  lu kang

  இலங்கை மக்களுக்கு மேலும் நன்மைகளைத் தரக்கூடிய வகையில், ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் தெரிவித்துள்ளார். மாத்தறை- பெலியத்தை ரயில் பாதை கட்டமைப்பு, தென்பகுதிக்கான பயணத்தை எளிமை படுத்தியுள்ளதுடன், உள்ளூர் பொருளாதாரம், சமூக அபிவிருத்திக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

  இதையும் வாசிங்க

  ‘ரா’ உளவு அமைப்புக்கு வேவு பார்த்த இந்திய தம்பதி ஜெர்மனியில் கைது!