சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வோம்! – எச்.ராஜா கண்டிப்பு

  0
  13
  h.raja

  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எச்.ராஜா பேசியதாவது:

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எச்.ராஜா பேசியதாவது:

   

  “தி.மு.க இந்து விரோத கட்சி இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். சமயபுரத்துக்கு ஸ்டாலின் பால் குடம் எடுத்தால்தான் இதை நம்புவேன். சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்படும். 
  மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் உள்ளது. ஆனால், இந்து கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தி.மு.க பிராமணர் எதிர்ப்பை கொள்கையாகக் கொண்டது. ஆனால், இப்போது பிரஷாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் தான் தி.மு.க சரணடைந்து இருக்கிறது” என்றார்.