சி.ஏ.ஏ எதிர்ப்பு எதிரொலி: இரண்டாவது முறையாக அஸ்ஸாம் பயணத்தை ரத்து செய்த மோடி!

  0
  1
  narendra modi

  அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாக உள்ளதால், இரண்டாவது முறையாக அஸ்ஸாம் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

  அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமாக உள்ளதால், இரண்டாவது முறையாக அஸ்ஸாம் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

  ttn

  அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு 2020 நாளை (10ம் தேதி) தொடங்குவதாக இருந்தது. இதை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
  ஆனால், மாநில பாரதிய ஜனதா அரசு மற்றும் உளவுத்துறை சார்பில் அஸ்ஸாமில் நிலைமை சரியில்லை என்பதால் தற்போதைக்கு அஸ்ஸாம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி நாளை அஸ்ஸாம் செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

  ttn

  இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் அஸ்ஸாமில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கலவரம் அங்கு வெடித்ததால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்தானது. இதனால், மோடியின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக மோடியின் அஸ்ஸாம் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.