சி.ஏ.ஏவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு.. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் !

  0
  3
  supreme court

  என்ன போராட்டம் நடந்தாலும் இச்சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

  குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடே போராட்டத்தில் ஈடுபட்டது. அதனை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பல அரசியல் கட்சிகளும், மக்களும் மத்திய அரசுக்கு வலியுறுத்தின. ஆனால், என்ன போராட்டம் நடந்தாலும் இச்சட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் 144 வழக்குகள் பதிவாகி உள்ளது. இன்று அந்த அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

  ttn

  அதில், இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக ஏன் அனைவரும் மனுத்தாக்கல் செய்கின்றனர் என்று என்னால் அறிய முடியவில்லை என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட போவதில்லை என்றும் கருத்து தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தேசிய குடிமக்கள் பதிவேடு(National Population Register) கணக்கெடுப்பை 3 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியமைத்து உத்தரவிட்டார். 

  ttn

  இதனையடுத்து தற்போது இருக்கும் மனுக்கள் தவிர, புதியதாக  தாக்கல் செய்யப்பட்ட 80 மனுக்களுக்கு மத்திய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக எந்த உயர்நீதி மன்றமும் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.