சிவசேனா கட்சி தலைவரின் சகோதரர் கொலை -பயங்கர ஆயுதங்களால் தாக்கியவர்களுக்கு வலை…  

  0
  8
  Mukesh Nayyar

  இவர்  உள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி சந்தையில் கமிஷன் முகவராவார் .
  செவ்வாய்க்கிழமை குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே அவரின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டது.அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர் கொண்டு சென்ற பணப்பையை   கொள்ளையடித்து சென்றதால் இது அவரின் பணத்தை கொள்ளையடிக்க நடந்த கொலையென சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  பஞ்சாப் மாநில சிவசேனா (பால் தாக்கரே )கட்சியின் துணைத்தலைவர்  ரமேஷ் நய்யரின் சகோதரர்  முகேஷ் நய்யர் (38) திங்கள்கிழமை இரவு பண்டாரி வட்டாரத்தில் கொல்லப்பட்டார்.இவர்  உள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி சந்தையில் கமிஷன் முகவராவார் .
  செவ்வாய்க்கிழமை குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே அவரின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டது.அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர் கொண்டு சென்ற பணப்பையை   கொள்ளையடித்து சென்றதால் இது அவரின் பணத்தை கொள்ளையடிக்க நடந்த கொலையென சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  murder1.jpg

  இந்த சம்பவத்தின் பின்னால் வேறு எந்த அரசியல் நோக்கமிருப்பதாக தெரியவில்லை என்றும் ,மேலும்  முகேஷ் நய்யர் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அவரது தலையிலும் கழுத்திலும் பலத்த காயம் ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.