சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’

  0
  16
  Kavin with sk

  நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  நம்ம வீட்டுப் பிள்ளைக்கு அடுத்து ஹீரோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிக்பாஸ் புகழ் கவினும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இத்தகவல் கசிய தொடங்கியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  Kavin with siva

  சிவகார்த்திகேயன், கவின் ஆகிய இருவருமே திருச்சியை சேர்ந்தவர்கள், இருவருமே தங்களது தொடக்க வாழ்க்கையை விஜய் டிவியில் ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.