சிற்றுண்டி செய்து தர மறுத்ததால் மனைவியைக் கொலை செய்த கணவன்

  0
  2
  Crimes against Women

  தேநீர் மற்றும் சிற்றுண்டி செய்து தர மறுத்ததால் கணவன் மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

  மும்பை :

  தேநீர் மற்றும் சிற்றுண்டி செய்து தர மறுத்ததால் கணவன் மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

  சிற்றுண்டியால் வாக்குவாதம் 

  மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்தவர் ரமேஷ் கெய்க்வாட். இவருக்கும் இவர் மனைவிக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இதனால் சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட சண்டையிடுவதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர்.

  tea snacks

  சம்பவம் நடந்த அன்று, ரமேஷ் கெய்க்வாட் தன் மனைவியிடம் தேநீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்துத் தருமாறு கேட்டிருக்கிறார். அவர் மனைவி செய்து தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ரமேஷின் மனைவி துணிகளை எடுத்துக் கொண்டு தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல தயாராகி இருக்கிறார். 

  நைலான் கயிற்றால் கொலை 

  வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மனைவியிடம் சென்று மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார் ரமேஷ் கெய்க்வாட். ஆனால், அவர் மனைவி வீட்டிற்கு திரும்ப மறுத்து சண்டையிட்டதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் நைலான் கயிற்றை வைத்து தன் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்.

  arrest

  பின்பு, இருவர் வீட்டிற்கும் கைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்த ரமேஷ் கெய்க்வாட், அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். காவல்துறையினர் ரமேஷ் மீது, இந்திய தண்டனைச் சட்டம்,செக்சன் 302 – ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதையும் படிங்க :

  அழுது கொண்டே இருந்த குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் ஒட்டிய தாய்!

  12 வயது சிறுமி தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை!