சிறையில் உள்ளவர்கள் குடும்பத்தினருடன் பேச ஸ்மார்ட் போன்! – தமிழக சிறைத்துறை நடவடிக்கை

  0
  7
  SMARTPHONE

  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறையில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க முடியாத நிலை உள்ளது. உறவினர்களை சந்திக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், சிறிய வழக்குகளில் சிக்கியவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

  தமிழக சிறைகளில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உரையாட 58 ஸ்மார்ட் போன்களை சிறைத்துறை நிர்வாகம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறையில் உள்ள கைதிகளை அவர்கள் உறவினர்கள் சந்திக்க முடியாத நிலை உள்ளது. உறவினர்களை சந்திக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறையில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், சிறிய வழக்குகளில் சிக்கியவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
  இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச சிறைத்துறை நிர்வாகம் மனிதாபிமான நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 58 ஸ்மார்ட் போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் கைதிகள் தங்கள் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் சந்தித்துப் பேசி மகிழ்ச்சியடைந்தனர். சிறைத்துறையில் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.