சிறுவனின் மூக்கிற்குள் உயிரோடு இருந்த வஞ்சரம் மீன்குஞ்சு !

  18
  Fish

  அந்த சிறுவன் எப்போதும் அவனது வீட்டின் அருகே இருக்கும் கிணற்றில் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கமாம்.

  புதுக்கோட்டை மாவட்டம், மண்ணவேளாம்பட்டியில் அருள் குமார் என்ற சிறுவன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவன் எப்போதும் அவனது வீட்டின் அருகே இருக்கும் கிணற்றில் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கமாம். அதே போல நேற்று மாலை நண்பர்களுடன் கிணற்றுக்குக் குளிக்கே சென்றுள்ளார். அந்த கிணற்றில் மீன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

  Arul

  அந்த கிணற்றில் அருள் குமாரும் அவனது நண்பர்களும் குதித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென அவனது மூக்கிற்குள் ஏதோ செல்வது போல் இருந்ததால், அருள் குமார் உடனே கிணற்றிலிருந்து வெளியேறியுள்ளார்.

  Arul

  அதன் பின் வலியால் துடித்த அருள் குமார் பெற்றோரிடம் இது குறித்துக் கூறியுள்ளான். அதனையடுத்து, அவனைப் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கே மருத்துவர்கள் உயிருடன் ஜிலேபி மீன் குஞ்சு சிக்கியிருப்பதைக் கண்டறிந்தனர்.

  Fish

  உடனே, இடுக்கியைப் போன்ற உபகரணத்தை வைத்து அருள் குமாரின் மூக்கிலிருந்த வஞ்சரம் மீன்குஞ்சை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.