சிரியாவில் இரண்டு கிராமங்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பு

  0
  1
  சிரியா,ரஷ்யா

  சிரியாவில் பயங்கரவாத கும்பல் ஆக்கிரமித்து வைத்திருந்த இரண்டு கிராமங்களை தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து சிரியா இராணுவம் மீட்டுள்ளது.

  ரஷ்யா அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாத கும்பல் களில் ஒன்றான ஜபாத் நுஸ்ரா மற்றும் இன்னும் சில பயங்கரவாத அமைப்புகள் சிரியாவின் இட்லிப் பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து ஆதிக்கம் செய்து வந்துள்ளனர்.

  சிரியாவில் பயங்கரவாத கும்பல் ஆக்கிரமித்து வைத்திருந்த இரண்டு கிராமங்களை தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து சிரியா இராணுவம் மீட்டுள்ளது.

  ரஷ்யா அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாத கும்பல் களில் ஒன்றான ஜபாத் நுஸ்ரா மற்றும் இன்னும் சில பயங்கரவாத அமைப்புகள் சிரியாவின் இட்லிப் பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து ஆதிக்கம் செய்து வந்துள்ளனர். அந்த கும்பலானது அருகில் இருந்த இரண்டு கிராமங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அங்குள்ள மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக சிரியா ராணுவத்திற்கு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

  syria

   பயங்கரவாத கும்பலின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான இரண்டு கிராம பகுதிகளையும் அங்கு இருந்த மக்களையும் மீட்க சிரியா ராணுவம் தங்களது படைகளை அனுப்பி தாக்குதலில் ஈடுபட முடிவு செய்தது.

  இந்நிலையில் நேற்று அதிகாலை பயங்கரவாத கும்பல் முகாமிட்டு இருந்த இடத்தை சிரியாவின் ராணுவ படை தீவிரவாத கும்பலின் கூடாரங்கள் நோக்கி தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. மேலும் பகுதிவாரியாக அருகில் இருந்த கிராம மக்களையும் ராணுவப்படையினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

   இந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய பயங்கரவாதிகளும் அவர்களுடன் இருந்த சிலரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன. இந்த தாக்குதல் குறித்து சிறிய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தாக்குதலில் பல முக்கிய பயங்கரவாதிகளும் தேடப்பட்ட சில கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த இன்னும் சிலர் பற்றி தற்போது வரை எவ்வித தகவல்களும் இல்லை. இந்த பயங்கரவாதிகளின் முகாமை முற்றிலுமாக எங்களது ராணுவம் தகர்த்தெரிந்துள்ளது.

  syria

  மேலும் அங்கிருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் எங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டன.

  இந்த இட்லிப் மாகாணத்தின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட மதாயா மற்றும் தால்-அல்-அரஜாகி ஆகிய இரு கிராமங்களும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டன. இந்த பயங்கரவாதிகளின் முகாம் குறித்து ரஷ்யா அமைச்சகத்திற்கு தகவல்கள் ஏற்கனவே அனுப்பிவிட்டோம். 

  ரஷ்யா மற்றும் துருக்கி இருநாடுகளுக்கிடையேயும் செய்யப்பட்ட ஒப்பந்தம் சமரசம் தராததால் இந்த பயங்கரவாத கும்பல் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டு இங்கு முகாமிட்டு இருப்பதாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன என சிரியா ராணுவ அதிகாரி தெரிவித்தார்.