சியோமியின் ‘எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2’ அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே

  0
  1
  Earbuds

  சியோமியின் ‘எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

  பெய்ஜிங்: சியோமியின் ‘எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

  சியோமியின் ‘எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2’ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த உண்மையான வயர்லெஸ் இயர்பட் மாடலானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் அடுத்த வெர்ஷன் ஆகும். சியோமி ஒரு புதிய அம்சமாக சுற்றுச்சூழல் சத்தத்தை ரத்து செய்தலை (ENC) இதில் வழங்கியுள்ளது. இந்த இயர்பட்ஸில் 14.2 மிமீ டிரைவர்ஸ் உள்ளன. மேலும் ஆப்பிள் ஏர்பாட்களைப் போலவே இன்-இயர் டிடக்ஷன் மற்றும் கெஸ்ட்சர் கன்ட்ரோல் சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  இந்த புதிய இயற்பட்ஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.6,700 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எப்போது இது சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதிகபட்ச தரத்தில் ஒலியை இது வழங்குவதால் இசையை ரசித்துக் கேட்பதற்கு மிகவும் உகந்த இயர்பட்ஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.