சிம்பிள் டூ இன் ஒன் ஆம்லெட்!

  0
  6
   ஆம்லெட்

  இது ஒரு புதிய அறிமுகம்,அவித்த முட்டையில் ஆம்லெட் போட முடியுமா?
  முடியும்,வாருங்கள் பார்ப்போம்.

  தேவையான பொருட்கள்.

  அவித்த முட்டை -1
  பச்சை முட்டை -1
  பொடியாக வெட்டிய வெங்காயம் சிறிது.
  பச்சை மிளகாய் 2
  மிள்குத்தூள் ½ டீஸ்பூன்
  மிள்காய் தூள் ½ டீஸ்பூன்

  இது ஒரு புதிய அறிமுகம்,அவித்த முட்டையில் ஆம்லெட் போட முடியுமா?
  முடியும்,வாருங்கள் பார்ப்போம்.

  egg

  தேவையான பொருட்கள்.

  அவித்த முட்டை -1
  பச்சை முட்டை -1
  பொடியாக வெட்டிய வெங்காயம் சிறிது.
  பச்சை மிளகாய் 2
  மிள்குத்தூள் ½ டீஸ்பூன்
  மிள்காய் தூள் ½ டீஸ்பூன்
  உப்பு 

  egg

  தேங்காய் எண்ணெய்.

  தோசைகல்லை அடுப்பில் வைத்து , அது சூடானதும்,சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்,சிறிது உப்பை அதன் மீது தூவுங்கள்.வெங்காயம் நன்றாக வெந்த பிறகு ,அவித்த முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி வெங்காயத்தின் மீது போடுங்கள்.½ டீஸ்பூன் மிளகாய் தூளை தூவி,சிறிது எண்ணெய் விட்டு வதக்கி அதைத் தனியே எடுத்து வைக்கவும்.

  egg

  இப்போது, மீதமுள்ள பச்சை முட்டையை உடைத்து தோசைக்கல்லின் மேல் ஊற்றி,கல்முழுவதும் வரும்படி அதைப் பரப்பி,அதன் மீது சிறிது உப்பும்,½ டீஸ்பூன் மிளகுத் தூளையும் தூவுங்கள்.பாதி வெந்ததும்,வதக்கி வைத்திருக்கும் வெங்காயம்,முட்டை கலவையை எடுத்து தோசைக் கல்லில் இருக்கும் முட்டையின் மேல் கொட்டி நீளவாக்கில் அதை மடித்து சிறிது எண்ணை விடுங்கள்.இப்போது மற்ற இரண்டு பகுதிகளையும் மடித்து திருப்பிப் போட்டு ஒரு நிமிடம் வேக விட்டால்,டூ இன் ஒன் அவித்த முட்டை ஆம்லெட் ரெடி.

  egg

  ரசம்,அல்லது காய் போடாமல் நீர்க்க வைக்கப்பட்ட சாம்பாருடன் சோற்றைப் போட்டு நன்றாக பிசைந்து கொண்டு,இந்த டூ இன் ஒன் ஆம்லெட்டை பக்க வாத்தியமாக வைத்துக்கொண்டு நீங்கள் கச்சேரியைத் துவங்கலாம்.