சிம்கார்டும் இல்லை! இண்டெர்நெட்டும் இல்லை! ஓப்போவின் அசத்தலான ஃபோன்!!

  0
  2
  ஒப்போ

  ஒப்போ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கி டாக்கியை போன்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்த நெட்வொர்க்கும் இல்லாமல் பேச முடியும்.  

  ஒப்போ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கி டாக்கியை போன்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்த நெட்வொர்க்கும் இல்லாமல் பேச முடியும்.  

  வாக்கி டாக்கி என்றதும் இது பழைய ஸ்டைலாக இருக்குமோ என நினைக்க வேண்டாம். இந்த வாக்கி டாக்கியில் ப்ளூடூத், வைஃபை போன்ற எந்த அதிநவீன தொழில்நுட்பங்களும் இல்லை. மாறாக  எந்த இடையூறு இல்லாமல் பேசவும், எஸ்.எம்.எஸ் அனுப்பவும் முடியும்.  

  அண்மையில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் கூட்டமைப்பில் ஒப்போ நிறுவனம், அண்டர் ஸ்கீரின் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. அப்போது தான் இப்படிப்பட்ட்ட ஒரு வாக்கி டாக்கியை தயாரித்துவருவதாக தெரிவித்தது. ஆனால் இந்த வாக்கி டாக்கி எந்த தொழில்நுட்பத்தில் இயங்குகிறது, இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன, எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த எந்த தகவலையும் ஒப்போ நிறுவனம் வெளியிடவில்லை. 

  ஒப்போவின் இந்த வாக்கி டாக்கி மூலம் எஸ்.எம்.எஸ், வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ்கால் ஆகியவை செய்ய முடியும். மேலும், இரண்டுக்கு மேற்பட்ட வாக்கி டாக்கி இருந்தால், அவற்றின் மூலம் க்ரூப் சேட்டிங் கூட செய்யலாம், கரண்ட் இல்லை என்றாலும் வாக்கி டாக்கி வேலை செய்யுமாம்…. இத வாங்கிட்டா ரீசார்ஜும் செய்ய வேண்டாம். நெட் பேக்கும் போட வேண்டாம்…