சின்ன ‘தல’ ரெய்னாவுக்கு பிறந்த ஆண் குழந்தை 

  0
  1
  குழந்தை

  இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா தம்பதிக்கு திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பிரியங்கா தம்பதிக்கு திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குபவர்  சுரேஷ் ரெய்னா. அதனால் தான்  சுரேஷ் ரெய்னாவுக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும் சுரேஷ் ரெய்னாவுக்கு சில ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். சின்ன தல என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் மனைவி பிரியங்கா ஆகியோருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முன்னதாக 2016ம் ஆண்டு கிரேஷியா என்ற மகள் பிறந்தார். அதற்கு கிராசியா என இந்த ஜோடி பெயர் வைத்தனர். 

   

   

  இந்நிலையில்  நேற்று பிரியங்கா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ரியோ என பெயர் வைத்துள்ளனர். இதற்காக ரெய்னா மற்றும் பிரியங்கா ஜோடிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.