சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான்: இயக்குநர் மகேந்திரன்

  0
  11
  ரஜினி - மகேந்திரன்

  முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞன். அவர் சினிமாவை போலவே அவரது பேச்சும் யதார்த்தமாக இருக்கும். பேட்டி ஒன்றில் அவர் அளித்த சுவாரஸ்ய தகவல்

  தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான ஆளுமை இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான மகேந்திரன், உதிரிப்பூக்கள், நண்டு என திரை ஆளுமைகள் கொண்டாடும் படங்களை தந்தவர். முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை போன்ற படங்களை தந்து ரஜினியின் திரைப்பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞன். அவர் சினிமாவை போலவே அவரது பேச்சும் யதார்த்தமாக இருக்கும். பேட்டி ஒன்றில் அவர் அளித்த சுவாரஸ்ய தகவல்

  உதிரிப்பூக்கள்

  உதிரிப்பூக்கள்

  சினிமாவை வெறுத்து ஓடிய எனக்கு, என்றுமே எனக்கு அது காதல் திருமணமாக இருந்ததில்லை. சினிமா எனக்கு கட்டாயத் திருமணம்தான். அந்த உன்னதமான ஊடகத்தில் நான் நுனிப்புல் மேய்ந்தவன்.

  ஒரே சமயத்தில் பலரைப் பார்த்து பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டு போட்டு ஏதோ ஒரு அனுமானத்தில் சமையல் செய்யும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடையதும்.

  மகேந்திரன்

  மௌனத்தை விட சிறந்த மொழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை மௌனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற எனது படங்களில் மௌனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான்.

  மகேந்திரன் சார்

  மௌனங்களை வசனங்களாக வடித்தார் மகேந்திரன். இசையால் அதன் ஒவ்வோரு இடத்தையும் நிரப்பினார் ராஜா. எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான் என்றார்.

   

  இதையும் வாசிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்