சிந்தியா விவகாரம்… பதில் சொல்லாமல் நழுவிய ராகுல் காந்தி!

  0
  1
  Jyotiraditya Scindia Rahul Gandhi

  மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மோடியை சந்தித்துள்ள அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

  மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியது பற்றி கேள்வி கேட்டபோது ராகுல் காந்தி பதில் அளிக்காமல் சென்றார்.
  மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மோடியை சந்தித்துள்ள அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

  ragul gandhi

  ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் என இளைஞர் பட்டாளத்தை எல்லாம் ராகுல் காந்தி தயார் செய்து வைத்திருந்தார். அவர்களுக்கு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சரவையில் இடமும் அளிக்கச் செய்தார். 
  மத்தியப் பிரதேச முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது கமல்நாத்துக்கு வழங்கப்பட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதாக கூறப்படுகிறது. இது பற்றி ராகுல் காந்தி இதுவரை தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றம் வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால், பதில் அளிக்காமல் விரைவாக அவர் நடந்து சென்றார்.