சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தகவல்!

  0
  1
  சந்தை

  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.

  உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,800ஐ எட்டியுள்ள நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

  ttn

  இந்நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு இருப்பதாலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் கூட்டத்தை குறைக்க வேண்டும் என்பதால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை மூடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.