சித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்!

  0
  3
  சரவணன்

  நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான சரவணனை சாண்டி  மற்றும் கவின் சந்தித்துள்ளனர். 

  நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான சரவணனை சாண்டி  மற்றும் கவின் சந்தித்துள்ளனர். 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் தொடங்கி 105 நாட்களுடன்  சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை சாண்டியும், மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் சரவணன் மற்றும் மதுமிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

  saravanan

   

  முன்னதாக  பிக் பாஸ் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சரவணன் அரசு பேருந்துகளில் பெண்களை உரசியுள்ளேன் என்று சொல்லப்போக அது பெரும் சர்ச்சையானது. இதனால் கடந்த ஜூலை 28 ஆம் தேதி சரவணனை பிக் பாஸ் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக அதிரடியாக வெளியேறினர். சரணவனனுடன் பிக் பாஸ் வீட்டில் அன்போடு பழகி வந்த சாண்டி  -கவின் இருவரும் கதறி அழுதனர். 
  இது ஹவுஸ்மேட்ஸ்  மட்டுமில்லாது  பிக் பாஸ் ரசிகர்களுக்கு  மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

   

  இந்நிலையில் சரவணனின் வீட்டுக்கு  சாண்டி  மற்றும் கவின் இருவரும் சென்றுள்ளனர். இதுகுறித்து சாண்டி  தனது இணையதள பக்கத்தில், சித்தப்பு இஸ் பேக் ஒரு வழியா உங்கள புடிச்சிட்டோம். ரொம்ப மிஸ் பண்ணோம் அண்ணா உங்கள நானும், கவினும்’ என்று பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.