சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

  0
  1
  நடிகைகள்

  நதியா கம்மல், நதியா தோடு, நதியா கொண்டை என்று ஒரு காலத்தில் தமிழகம் முழுக்கவே ஆடைகளுக்கும், அழகுக்கும் நதியா புராணம் பாடிக்கொண்டிருந்தது. அதன் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டு, இரு குழந்தைகளுக்கு தாயாகி மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா திரும்ப நீ…ண்ட வருடங்கள் கழித்து நடிக்க வரும் போது பழைய நதியாவாகவே வந்திருந்தார். ஏன்.. ஸ்லிம் சிம்ரன், பழைய சிம்ரனாக ரஜினியுடன் டூயட் பாடும் அளவிற்கு வந்திருந்தாரே…

  நதியா கம்மல், நதியா தோடு, நதியா கொண்டை என்று ஒரு காலத்தில் தமிழகம் முழுக்கவே ஆடைகளுக்கும், அழகுக்கும் நதியா புராணம் பாடிக்கொண்டிருந்தது. அதன் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டு, இரு குழந்தைகளுக்கு தாயாகி மும்பையில் செட்டிலாகிவிட்ட நதியா திரும்ப நீ…ண்ட வருடங்கள் கழித்து நடிக்க வரும் போது பழைய நதியாவாகவே வந்திருந்தார். ஏன்.. ஸ்லிம் சிம்ரன், பழைய சிம்ரனாக ரஜினியுடன் டூயட் பாடும் அளவிற்கு வந்திருந்தாரே… இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்கொண்டு, சிசேரியன் முறையில் குழந்தைகளையும் பெற்றெடுத்து பின் எப்படி ஸ்லிம்மாகவே உடம்பை வைத்திருக்கிறார்கள் என்கிற ரகசியம் தெரியுமா? 

  nadhiya

  இதெல்லாம் ரொம்ப சிம்பிளான விஷயம் தான்… தேவை உடம்பின் மீது நிறைய அக்கறையும், கொஞ்சம் விடாமுயற்சியும் தான்!
  பெண்களின் உடலமைப்பு படி இயல்பாகவே திருமணம் முடிந்த பின்னரோ, குழந்தை பிறப்புக்குப் பின்பே எடை கூடிவிடும். கர்ப்ப காலத்தில் எடை கூடுவது முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வந்தாலும், கற்பகாலத்தில் 12 கிலோ வரை எடை கூடலாம்.  கருவுற்றிருக்கும் போது உடல் எடை 9 மாதங்கள் நிதானமாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் தான் அதிகரிக்கிறது.

  simran

  அதே போல நாம் உடல் எடையை குறைக்கும் போதும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்வதே சிறந்த பலன்களைத் தரும்.  குழந்தை பெற்றெடுத்த பின்பு முதல் 40 நாட்கள் தாய்மைக்கு முக்கியமான காலங்களாக இருக்கின்றன. இந்த காலங்களில் உடலளவிலும், மன அளவிலும் தெம்பு கிடைப்பதற்ஆக பெண்கள் நன்றாக சாப்பிட்டு நல்ல ஓய்வு எடுத்து தங்கள் உடல் எடை அளவிலும் மனதளவிலும் சீராக்கிக் கொள்ள வேண்டும்.  உடல் எடையை குறைக்க வேண்டும் என்று உணவு சரியாக சாப்பிடாமல் இருந்தால் அது பின்னர் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதினால், இந்த காலக்கட்டங்களில் நிச்சயமாக நீங்கள் வழக்கமாக உண்பதைவிட 300 கலோரி அளவு சரியான ஊட்டச்சத்துள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் 500 கலோரிகள் வரை உங்கள் எடை குறைவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. பேறு காலம் முடிந்து 40 நாட்களுக்குப் பின்பு மெல்ல மெல்ல உடல் எடைக் குறைப்புக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் அதிலும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் நிச்சயம் மருத்துவரின் அனுமதியுடன் அவர்கள் சொல்லும் காலம் வரை காத்திருந்து அதன் பின் எளிய உடற்பயிற்சிகளில் ஆரம்பிக்கலாம்.

  pregnant women

  பிரசவத்திற்கு பின்பு எடை குறைப்பின் முக்கியம் உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பம் இருந்தால் உடல் எடை குறைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். மிக மெதுவான நடைப்பயிற்சியில் ஆரம்பித்து நீங்கள் நடக்க முயற்சிக்கலாம். உடல் பயிற்சியை ஆரம்பித்ததும் வயிற்றுப்பகுதியை குறைக்க வேண்டுமென்று முழுக்கவனத்தையும் செலுத்தாமல் நடப்பதன் மூலம் உடலின் மொத்த எடையையும் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். அதன் பின் இறுதியாக உங்கள் தசைகளுக்கு வலு சேர்க்க கூடிய பயிற்சிகளை செய்து வரலாம். இரண்டு மூன்று உடற்பயிற்சிகள் இணைந்து சில பயிற்சிகள் செய்யும் போது உங்கள் தசைகள் வலுப்படும். உதாரணமாக,  தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும் உங்கள் கைகளை நேராக வைத்து தரையில் இருந்து மெதுவாக கால்களை உயர்த்தவும். பின்னர் மெதுவாக கால்களை கீழே இறக்கவும். கால்கள் பூமியில் படும் போது உங்கள் வயிற்று பகுதி மிகச் சுலபமாக எடுக்க தயாராகும். இது போல் செய்யவும். தரையில் படுத்து கால்களை மடக்கிக் கொள்ளவும். பாதங்கள் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். அப்படியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அப்போது உங்கள் வயிறு நன்றாக உள்ளிழுத்தபடி இருக்கும். இந்த மூச்சு விடும் பயிற்சியை செய்ய வேண்டும். இதே போல் மூச்சை உள்ளிழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். மூச்சை வெளியே விடும்போது உங்கள் இடுப்புப் பகுதியை சற்று மேலே தூக்கவும். இதே போல 5 நொடிகள் இருக்கவும். பின் இயல்பு நிலைக்கு வரவும். 

  fruits

  தவிர, வழக்கமான மூன்று நேர உணவை விட சிறிது சிறிதாக 6 வேளை உணவு சாப்பிடும் போது இடைவேளைகளில் ஆரோக்கியமான பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்யும். காலை நேர உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனை ஆரோக்கியமான உணவாக சரிவிகித உணவாக இருக்கும் படி பார்த்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் சீர்படும். பச்சை குடைமிளகாய், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம், நிலக்கடலை, முட்டை போன்றவற்றைச் சாப்பிடுங்கள். நார்ச்சத்து அதிகமான உணவை சாப்பிடுங்கள். இரும்புச்சத்து கால்சியம் மற்றும் புரதசத்து அதிகம் இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.  இத்தருணத்தில் நீர்ச்சத்து சீக்கிரம் குறைந்து விடுவதால் அடிக்கடி பலரும் அருந்தவேண்டும் நாள் ஒன்றிற்கு 10, 12 டம்ளர் நீர் மிகவும் அவசியமாகும். எடைகுறைப்பு கவனம் செலுத்துவதால் நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இவற்றை கடைபிடித்து நீங்களும் குழந்தை பிறந்த பிறகும் ஸ்லிம்மாக வலம் வரலாம்!