சிசிடிவி கேமராக்கள் மூலம் அமெரிக்காவை உளவுபார்க்கும் சீனா!?

  0
  5
  கேமரா

  அமெரிக்காவில் சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களால் உளவு பார்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. 

  அமெரிக்கா: அமெரிக்காவில் சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களால் உளவு பார்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. 

  குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், குற்ற சம்பவங்களில்  ஈடுபடுபவரை உடனடியாக கண்டுபிடிக்கவும்  உதவும் கருவியாக மாறியுள்ளது சிசிடிவி கேமராக்கள். சாதாரண கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை சிசிடிவி கேமராக்கள் ஆக்கிரமித்துள்ளன. இங்கு ‘சிசிடிவி கேமிராவில் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற ஒன்றை வாசகம் நாம் தவறு செய்யவில்லை என்றாலும்  ஒருவித கிலியை  ஏற்படுத்தும். 

  america

  இந்நிலையில்  ஒருநாட்டையே சீனா  தனது தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களை கொண்டு கண்காணிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது அமெரிக்க அரசின் அலுவலகங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நிறுவப்பட்டுள்ள  சீன தயாரிப்பு கேமரா கண்காணிப்பு மூலம் அந்நாட்டு  அரசின் நடவடிக்கைள் உளவுபார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

  cctv

  இதன் காரணமாக அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள சீன தயாரிப்பு கேமராக்களை அகற்ற அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக ஸெஜியான் டாஹ்வா டெக்னாலஜி மற்றும் 42 சதவீதம் சீன அரசின் பங்களிப்பில் இயங்கும் ஹங்க்சவ் ஹிக் விசன் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை அகற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் கேமராக்களை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் அது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.