சிங்கப் பெண்ணே பாடலை வெளியிட்ட பிகில் படக்குழுவினர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! 

  0
  1
  #Singappenney

  நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

  கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான ’பிகில்’ படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. 

  #Singappenney

  இந்நிலையில்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடி வெளியான சிங்கப்பெண் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.