சிங்கப்பூரில் ஏப்.7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு!

  0
  11
  singapore

  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10 லட்சம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

  சிங்கப்பூர்

  இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்.7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள், பொருளாதார துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீ சியாங் லூங் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டைவிட்டு வெளியே வருவோர் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் லீ சியாங் உத்தரவிட்டுள்ளார்