சிஏஏ சட்டத்துக்கு எதிராக 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்து – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  11
   முக ஸ்டாலின்

  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  திருவள்ளூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கையெழுத்து வாங்கினார். அப்போது அவர் பேசும்போது, “நாட்டில் அனைவரும் சமம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவ்வாறு யாரும் சமமாக வாழக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மோடி தனது ஆட்சியில் பணி செய்து கொண்டிருக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கடுமையாக விமர்சிக்கிறது. இந்தியாவை பற்றி இன்னொரு நாடு விமர்சிக்கக் கூடிய கேவலமான நிலையில் நம்முடைய நாடு உள்ளது.

  MK Stalin

  எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் பணியை திமுக தொடங்கியுள்ளது. நேற்றைய கணக்கின்படி கையெழுத்து 2 கோடியைத் தாண்டிவிட்டது. உண்மைகளை புரிந்து கொண்டு இந்த கொடுமைகளை தெரிந்து கொண்டு மக்கள் அவர்களாகவே முன் வந்து கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கையெழுத்து இயக்கத்தைக் கூட சிலர் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை தடைசெய்ய வேண்டும் என பேசுகிறார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கம் ஜனநாயக நடைமுறைகளில் ஒன்று என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.