சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்: இஸ்லாமிய மக்களுக்காக உணவு சமைக்கும் இந்து மக்களின் சமத்துவ சமையல்!

  0
  2
  சிஏஏ

  இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை எதிர்த்து பலரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  ttn

  இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது.இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம்  மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியும் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

  ttn

  இந்நிலையில்  வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  இஸ்லாமிய மக்களுக்காக இந்து மக்கள் சமைத்து உணவு அளிக்கின்றனர்.  

  ttn

  போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமிய மக்களின் பசியை போக்கும் வகையில்,  இந்து மக்கள் சமைத்து அதை பொட்டலங்களில் எடுத்துக்கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு அளித்து வருகிறார்கள்.

  ttn

  இந்த சமத்துவ சமையலுக்கான  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.