சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்! அதிர்ந்துபோன ரசிகர்கள்.. 

  0
  13
  Shane Watson

  பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறுக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

  பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச படங்கள் வெளியாகியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தவறுக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

  இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஷேன் வாட்சன். இதே போல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக்பாஸ் லீக் தொடரில்  சிட்னி தண்டர்ஸ் என்னும் அணிக்காக விளையாடி வந்தார்.  38 வயதான வாட்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 

  இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக பல கருத்துகளை பகிர்ந்துவருவார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சில ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதுடன் அதில் பல ஆபாச படங்கள் பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தவறுக்காக வாட்சன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  Shane Watson

  இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “ஹேக்கர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தனர். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட  ஆபாச புகைப்படங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது”என்று பதிவிட்டுள்ளார்.