சிஆர்பிஎப் வீரர்கள் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

  0
  31
  aff

  தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) 2,500 பேர் சென்று கொண்டிருந்த வண்டிகள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

  இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஒட்டு மொத்த நாடே தோளோடு,தோள் நிற்கும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

  சி.ஆர்.பி.எப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது என பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். 

  தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போரிட ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையுடன் நிற்கிறது என்று கூறிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்