சாவி கொடுத்த எடப்பாடி… வாயில் அடித்த பாஜக..!

  13
  எடப்பாடி பழனிசாமி

  மத்திய அரசு சமீபத்தில்தான் தமிழக அரசுக்கு சிறந்த காவல் துறை விருதை அளித்தது. அதை அசிங்கப்படுத்துவதா? என்று அதிமுக தரப்பில் கோபம் கொப்பளித்து வருகிறார்கள்.

  தமிழகத்தில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அது ரொம்பவே அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. மத்திய அரசு சமீபத்தில்தான் தமிழக அரசுக்கு சிறந்த காவல் துறை விருதை அளித்தது. அதை அசிங்கப்படுத்துவதா? என்று அதிமுக தரப்பில் கோபம் கொப்பளித்து வருகிறார்கள். இதனால் அமைச்சர் ஜெயகுமாரை அழைத்து பொன்னாரை பொளந்து கட்டச்சொன்னார்களாம்.

  Edappadi

  பாஜக கட்சியில் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அதிமுக தரப்பின் மீது பாய்ச்சல் காட்டுகிறார். மத்திய அரசு கொடுத்த விருதை அவரது கட்சிக்காரரே குறை சொல்வதா? அவர் விமான பயணம், பேட்டி, மீண்டும் விமான பயணம் என்றுதானே இருந்தாரே தவிர தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவர் மத்திய அமைச்சராக இருந்ததே தண்டம் என்கிற ரீதியில் தாளித்து எடுத்துவிட்டார் அமைச்சர் ஜெயகுமார். eps

  மேலிட அனுமதி இல்லாமல் அமைச்சர் ஜெயக்குமார் வறுத்தெடுத்ததை டெல்லி மேலிடத்துக்கு பொன். ராதாகிருஷ்ணன்  கொண்டு சென்றுள்ளார். ஆனால் பாஜக மேலிடம் அப்புறம் அதை பற்றி பேசலாம் என்று சொல்லி வாயை அடைத்து விட்டதாகக்கூறுகிறார்கள். பொன்னார் இப்போது புண்ணாராகி தவிக்கிறார்.