சாலையில் சரிந்த அதிமுக கொடி! தொடர்ந்து வந்த லாரியில் சிக்கிய பெண்!! அன்று சுபஸ்ரீ… இன்று அனுராதா

  0
  10
  Flag

  கோவையில் தெரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் விபத்தில் சிக்கினார்.

  கோவையில் தெரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் விபத்தில் சிக்கினார்.

  சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிக்கு செல்வதற்காக அனுராதா இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது. அந்த சமயம் பார்த்து அந்த வழியாக லாரி வந்தது. கம்பம் அனுராதா மீது விழுந்ததில் நிலைத்தடுமாறி அனுராதா சாலையில் விழுந்தார். அப்போது லாரி அனுராதா மீது ஏறியது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

  Anuradha

  ராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது. மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன. இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுராதா அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடிக்கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.