சாராயம் விற்க எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள்.. நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுத் தப்பியோடி கும்பல்… அதிர வைக்கும் சம்பவம்!

  0
  3
  கள்ளச்சாராயம்

  ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

  ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர், கள்ளச்சாராயம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இதே போல, வேலூரை அடுத்த அரியூர் அருகே புலிமேடு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடந்து வந்துள்ளது. அங்கு ஆண்கள் கூட்டம் கூட்டமாக  செல்வதால், கொரோன வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது என கருதிய ஊர்மக்கள் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்ச எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது தொடர்ந்த வண்ணம் இருந்துள்ளது.

  ttn

  இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், இப்பகுதியில் சாராயம் காய்ச்ச வேண்டாம் என்று சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த கும்பலிடம் கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், சாராயம் காய்ச்சிய நபர்கள் நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதில், பூபாலன்(30), சங்கர் (23), அண்ணாமலை (18) ஆகிய மூன்று பேரின் மீதும் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

  ttn

  அதனையடுத்து ஊர்மக்கள் அவர்கள் மூன்று பேரையும்  வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.