சாய் பல்லவி படத்தில் நடிக்கும் ராஷ்மிகா

  0
  10
  sai pallavi and rashmika

  தெலுங்கு நடிகர் நானி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தனது அடுத்த படமான ‘நானி 27’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கு ‘ஷியாம் சிங்கா ராய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ராகுல் சங்கிருத்யன் என்பவர் இயக்குகிறார். சமீபத்திய தகவலின் படி, இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எனவும், இது 2020 மே மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  தெலுங்கு நடிகர் நானி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தனது அடுத்த படமான ‘நானி 27’ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கு ‘ஷியாம் சிங்கா ராய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ராகுல் சங்கிருத்யன் என்பவர் இயக்குகிறார். சமீபத்திய தகவலின் படி, இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் எனவும், இது 2020 மே மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரேமம் பட புகழ்  சாய் பல்லவி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் கன்னட அழகி ரஷ்மிகா மந்தண்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  actor-nani

  ரஷ்மிகா மந்தன்னா தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மனதில் டெண்ட் அடித்து தங்கி விட்டார். அவரது சமீபத்திய படங்களான ‘சரிலேரு நீகேவரு’ மற்றும் ‘பீஷ்மா’ பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. 

  sai-pallavi-87

  சாய் பல்லவியை மெயின் ஹீரோயினாக நடிக்க இருக்கும்  நிலையில், ராஷ்மிக்கா இன்னொரு ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்மிகா மந்தன்னா திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திலும், சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுடன் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.

  தெலுங்கு திரை உலகில் இப்போ ரஷ்மிகா பீவர் தான் போல