சாயிபாபாவுக்கு இந்த பழங்களை படைத்து தரித்திரத்தை விரட்டுங்கள்!

  0
  3
   சாயி பாபா

  அதே போல் பாபா தன்  பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை  நிகழ்த்தியுள்ளார். நிகழ்த்தியும் வருகிறார்.

  புண்ணியதலமான  சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தவர் ஸ்ரீ சாயி பாபா. அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் எண்ணிலடங்காதவை. மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்கு ஓடி வந்து உதவுவதில் அந்த மகானுக்கு  நிகர் அவர் மட்டும் தான்.  அதே போல் பாபா தன்  பக்தர்களுக்காக நிறைய அற்புதங்களை  நிகழ்த்தியுள்ளார். நிகழ்த்தியும் வருகிறார். அப்படிப்பட்ட பாபாவிற்கு எப்படி நைவேத்தியம்  செய்வது  என்பதை இந்த  செய்தியில் காணலாம்.

  baba

  பாபாவின் ஒரே சொத்து அவரின் பக்தர்கள் தான். அவருடைய பக்தர்கள் சாய்பாபாவிற்கு பல வகையான உணவு பொருட்களை அன்புடன் அளிப்பார்கள். அதை அன்புடன் வாங்கிக்கொள்ளும் பாபா, அதை குழந்தைகளுக்கும், அங்குள்ள மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். 

  pasalai

  சீரடி சாயி பாபா வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாக பசலைக்கீரையாம். பாபாவை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்கள் பசலைக்கீரையை அவருக்கு நைவேத்தியம் செய்து வைத்து வழிபாடு செய்வது நல்லது . குறிப்பாக சீரடிவாசிகள் ரவையில் அல்வா கிளறி பாபாவுக்கு கொடுப்பார்களாம். அதை பாபா மிகவும் விருப்பப்பட்டு உண்பாராம்.

  baba

  அதேபோல் பழவகைகளில் அவருக்கு பிடித்தது ஆரஞ்சு பழம். அதை பாபாவுக்கு படைத்து வணங்கினால் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். பாபா துறவிபோல் பிச்சை எடுத்து உண்டு வந்ததால், அவருக்கு அனைத்தையும் விட மிகவும் பிடித்த உணவு என்றால் அது கஞ்சி மற்றும்  கூழ் தான். 

  baba

  மேலும் பாபாவிற்கு மிகவும் விருப்பமான மஞ்சள்நிற சாமந்தி மலர்களைச் சமர்ப்பித்து, வழிபாடு செய்துவந்தால்  எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறி  வாழ்வில் செல்வம் பெருகும்.