சாமி கும்பிட வந்தாய்ங்களா…கொள்ளையடிக்க வந்தாய்ங்களா…கோவில் திருவிழாவில் நடந்த கொடுமை!?

  0
  2
  சித்திரை திருவிழா

  சித்திரை திருவிழாவில் பாதுகாப்புகளைத் தாண்டி 92 சவரன் நகை கொள்ளை போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மதுரை: சித்திரை திருவிழாவில் பாதுகாப்புகளைத் தாண்டி 92 சவரன் நகை கொள்ளை போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்படி 10-ம் நாள் விழாவான கடந்த 17 ஆம் தேதி மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா ,   தேரோட்டம்  என விமர்சையாக திருவிழா நடைபெற்றது. அதில் முக்கிய நிகழ்வான  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. பச்சைப்பட்டு உடுத்தித் தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 6 மணிக்கு  புறப்பட்ட கள்ளழகர்  ‘கோவிந்தா’ முழக்கத்துடன் வைகை ஆற்றில்  இறங்கினார். 

  kallazhagar

  இந்த நிகழ்வில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கள்ளழகரைத் தரிசித்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் 750 துணை ராணுவப் படை போலீசார்,  50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள், அத்தோடு 500 போலீசார் சீருடை அணியாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

  kallazhagar

  இந்நிலையில்  மதுரை சித்திரை திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது 12 பெண்களிடமிருந்து 92 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட  கொள்ளையர்களை சிசிடிவி உதவியுடன் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது மதுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   இதையும் வாசிக்க: கடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ!