சாண்டியின் ‘பிகில்’ வெறித்தனம் வெர்ஷன் : வைரல் வீடியோ!

  0
  2
  சாண்டி

  கால்பந்து விளையாட்டு வீராக வலம்வந்த விஜய் மாஸாக நடித்து பலரையும் தன் வசப்படுத்தினார்.

  சென்னை : ‘பிகில்’  விஜய் ஸ்டைலில்  சாண்டி ஃபுட் பால் விளையாடும்  வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

   நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ வெற்றி கூட்டணியில் உருவாகிய பிகில் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

  bigil

  ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்த இப்படத்தில்  நயன்தாரா,  நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  இப்படத்தில் கால்பந்து விளையாட்டு வீராக வலம்வந்த விஜய் மாஸாக நடித்து பலரையும் தன் வசப்படுத்தினார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியுள்ளது. 

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Back to game ?

  A post shared by SANDY (@iamsandy_off) on

  இந்நிலையில் நடன இயக்குநரும், பிக்பாஸ் 3 போட்டியாளருமான சாண்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிகில் வெறித்தனம் சாண்டி வெர்ஷன் என்று குறிப்பிட்டு  ஃபுட் பால் ஆடுகிறார். இந்த வீடியோவுக்கு  அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸை  தெறிக்கவிட்டு வருகின்றனர். ஏற்கனவே தான் ஒரு  ஃபுட்  பால் பிளேயர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி  கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.