‘சாணி அடித்தேன்’ என்று கூறிய லாரன்ஸ்…கமலை நேரில் சந்தித்து விளக்கம்!

  11
  கமல் ஹாசன்

  இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூகவலைதளங்களில் லாரன்ஸை வறுத்தெடுத்தார்கள். 

  நடிகர் ரஜினிகாந்த் தர்பார் ஆடியோ விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ், நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சார் ரசிகன். அவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும்போதும் சண்டை போட்டிருக்கிறேன். இங்கு சொல்வதில் தப்பில்லை. கமல் சார் பட போஸ்டர் ஒட்டினால் கூட அதில்போய் சாணி அடிப்பேன். அப்போது என் மனநிலை மை அப்படி இருந்தது என்றார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூகவலைதளங்களில் லாரன்ஸை வறுத்தெடுத்தார்கள். 

  ttn

  இதுகுறித்து விளக்கமளித்த லாரன்ஸ், தர்பார் பட  இசை வெளியீட்டு விழாவில் கமல் சார் போஸ்டர் மீது நான் சாணி அடித்தது பற்றி பேசிய பேச்சு மட்டும் சிலர்  பெரிதுபடுத்துகிறார்கள்.கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த  விஷயம் அது. எனக்கு அவர் மீது நிறைய மதிப்பு உள்ளது. தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார். 

  இந்நிலையில் ராகவா லாரன்ஸ் கமல் ஹாசனை நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மையில் ஒரு நிகழ்ச்சியை மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் பற்றி  தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. என் பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப்  பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கம் அளித்துள்ளேன். இந்நிலையில்  இன்று  மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட  கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார் அவருக்கு என் நன்றியையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.