சாக்ஷியின் மாஸ்டர் பிளானை உடைத்த சாண்டி!

  0
  8
  சாக்ஷி

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்துள்ளார். 

  இந்த நிலையில் நேற்று செம ட்விஸ்ட்டாக ஏற்கனவே வெளியே சென்ற அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதனால் கண்டிப்பாக வீட்டில் கலவரங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் நேற்று வந்த உடனே சாக்ஷி, ஷெரின் மற்றும் வானிதா கூட்டுச்சேர்ந்து லாஸ்லியாவுக்கு எதிராக திட்டம் திட்டினர். 

  தற்போது இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி, அபியிடம், ‘நீ மட்டும் தான் வெளியே போனது போல் உள்ள வந்திருக்க. சாக்ஷி, மோகன் வைத்யா பழி வாங்கும் நோக்கத்தோடு உள்ளே வந்துள்ளார்கள்’ என்று கூறுகிறார்.