சவுதி மற்றும் கொரோனா வைரஸால் ரத்த கண்ணீர் வடித்த முதலீட்டாளர்கள்….ரூ.7 லட்சம் கோடி நஷ்டம்…. சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ச்சி….

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,942 புள்ளிகள் வீழ்ந்தது.

  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நாடான சவுதி அரேபியா ரஷ்யாவுடன் விலை யுத்தத்தில் இறங்கியுள்ளது. சவுதி தனது விற்பனை குறைத்ததோடு, தட்டுப்பாடு இல்லாமல் சப்ளை செய்வதாக இறக்குமதி நாடுகளுக்கு உறுதிமொழி கொடுத்தது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 30 சதவீதத்துக்கு மேல் வீழ்ந்தது. 

  விலை போட்டியில் இறங்கிய சவுதி

  நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே போவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியை கண்டது. சென்செக்ஸ கணக்கிட உதவும், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 30 நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைந்தது.

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 357 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,199 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.42 லட்சம் கோடியாக வீழ்ந்தது. ஆக, இன்று ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.6.87 லட்சம் கோடியை இழந்தனர்.

  பங்கு வர்த்தகம்

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,941.67 புள்ளிகள் வீழ்ந்து 35,634.95 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 538.00 புள்ளிகள் சரிந்து 10,451.45 புள்ளிகளில் முடிவுற்றது.