சவுதி அரேபியா: புனித யாத்திரை சென்ற பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி

  0
  6
  விபத்து

  புனித யாத்திரை சென்ற பேருந்து மதினா மசூதி அருகே உள்ள ஹஜ்ரா சாலையில் எதிரே வந்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

  சவுதி அரேபியாவில் புனித யாத்திரைக்காக புறப்பட்ட பேருந்து திடீரென விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்ததில் 35 பேர் பலியான சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  சவுதி அரேபியாவில் புனிதத்தலமான மெக்கா மற்றும் மதினா மசூதிகளுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது உண்டு. அதேபோல் நேற்றைய தினம் வெளிநாட்டு நபர்களை ஏற்றிக் கொண்டு புனித யாத்திரை சென்ற பேருந்து மதினா மசூதி அருகே உள்ள ஹஜ்ரா சாலையில் எதிரே வந்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

  saudi

  இதில் பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த விபத்தினால் மொத்தம் பலி எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

  இதுகுறித்து மதீனா நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எதிரே வந்த கனரக வாகன ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புனித யாத்திரை பேருந்தில் அரபு மற்றும் ஆசிய பக்தர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

  ambulance

  இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போல் மெக்கா மசூதிக்கு புனித யாத்திரை சென்ற பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில், 4 பிரிட்டிஷ் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.