சளித்தொல்லைகளைப் போக்கும் பாலக்கீரை மிளகுக் கூட்டு

  0
  1
  பாலக்கீரை மிளகுக் கூட்டு

  தேவையான பொருட்கள்
  பாலக்கீரை           -1கட்டு
  சீரகம்                     -1டீஸ்பூன்
  சின்ன வெங்காயம்         -5
  தேங்காய்                  -1/4மூடி
  காய்ந்த மிளகாய்                -2
  புளி                       -சிறிதளவு

  தேவையான பொருட்கள்
  பாலக்கீரை           -1கட்டு
  சீரகம்                     -1டீஸ்பூன்
  சின்ன வெங்காயம்         -5
  தேங்காய்                  -1/4மூடி
  காய்ந்த மிளகாய்                -2
  புளி                       -சிறிதளவு
  மிளகு                     -2டீஸ்பூன்
  பூண்டு                     -3பல்
  கறிவேப்பிலை        – 10, 15 இலைகள்
  கொத்தமல்லி              -சிறிதளவு
  உப்பு                      -தேவையான அளவு
  எண்ணெய்            -சிறிதளவு
  தாளிக்க
  கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள்

  keerai

  செய்முறை
  பாலக்கீரையை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து வெங்காயம், பூண்டு போட்டு வதக்கிக் கொள்ளவும். இப்போது கழுவி வைத்துள்ள பாலக்கீரையை இதனுடன் சேர்த்து வேக விடுங்கள். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும். மொத்தமாக தண்ணீரை ஊற்றிவிடக் கூடாது.  கீரை, பாதி வெந்த நிலையில் இருக்கும் போது கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை இதனுடன் சேர்க்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்த்துருவல், பெருங்காய்த்தூள் சேர்க்க வேண்டும். சூடான, சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை மிளகு கூட்டு தயார். கீரையை அதிகம் வேகவிடாமல் எடுத்து பரிமாறினால் முழு சத்தும் கிடைக்கும்.