சர்வாதிகாரத்தை  நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது – கமல்ஹாசன்

  0
  5
  Kamalhassan

  சர்வாதிகாரத்தை  நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  சர்வாதிகாரத்தை  நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தற்போது தமிழகம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்துவருகிறது. மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

  Kamal

  இந்நிலையில் சென்னை பல்கலை கழகத்தில் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி திமுக மற்றும் எதிர் கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும். சர்வாதிகாரத்தை  நோக்கி நாடு போய்க்கொண்டிருக்கிறது. மாணவர்களை அகதிகளாக மாற்றி வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நேற்று இரவில் இருந்து சாப்பிடவில்லை. சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அதனை மாற்றியமைக்க வேண்டும். ஆட்சியாளர்களின் கையில் நேர்மை என்பது இல்லை ஆனால் என் கையில் இருக்கிறது”எனக்கூறினார்.