சர்ச்சையாக மாறியுள்ள பிரபல பாடகி வீட்டு திருமணம்: காரணம் இதுதான்!

  0
  3
  சுதா ரகுநாதன்

  கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனின்  மகள் திருமணத்திற்கு  எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

  கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதனின்  மகள் திருமணத்திற்கு  எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  sudha

  பிரபல கர்நாடகா இசை பாடகி சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிகா  மைக்கேல் முர்பி என்ற வெளிநாட்டுக்காரர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதனையடுத்து சுதா ரகுநாதனுக்கு எதிராக பலரும்  கருத்து கூறி வருகின்றனர். 

  sudha

  சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதால் சுதா ரகுநாதனை இனி கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மேலும் அவர் மகள் திருமணம் செய்து கொள்ளவுள்ள மைக்கேல் முர்பியின் நிறத்தை வைத்து கேலியும் செய்து வருகின்றனர்.

  sudha

  ஒருசிலரோ,  சுதா ரகுநாதன் உள்பட அவரது மொத்த குடும்பமும்   கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும்  வதந்தி பரப்பி வருகின்றனர். 

  sudha

  இதனிடையே, யாரை  திருமணம் செய்துகொள்ள வேண்டும், அவர் எந்த மதத்தை  சார்ந்து இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதனால் இது போன்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுங்கள் என்று  சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.