சர்ச்சைகளை கடந்து பிகில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது!

  0
  1
   பிகில்

  சிக்கல்களைக் கடந்து விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று திரையிடப்பட்டன.

  சென்னை : சிக்கல்களைக் கடந்து விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகள் இன்று திரையிடப்பட்டன.

  bigil

  விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்துக்குச் சிறப்புக் காட்சிகள் இல்லை என்று கூறி வந்த தமிழக அரசு  நேற்றிரவு 10 மணியளவில்  அனுமதி வழங்கியது. தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால்  அனுமதி அளித்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

  bigil

  இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் காலை 4 மணிக்கு  பிகில்  திரைப்படம் வெளியானது. இதனால்  விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன்  மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தைக்  காணச் சென்றுள்ளனர்.