சரும பாதுகாப்பிற்கான இயற்கை க்ரீம் செய்முறை

  0
  3
  tasmac

  பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம். 

  பாதங்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நாம் பாதங்களின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மாதத்தில் இரண்டு நாட்களிலாவது பாதங்களை மசாஜ் செய்து விடுங்கள். ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில் முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக வெந்நீர் பரப்பி அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு இரண்டு பாதங்களையும் வைத்து கொள்ளவும்.

  பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டே செய்யலாம். 

  cream

  பாதங்கள் தான் நம் உடலின் ஆரோக்கியத்தின் கண்ணாடி. முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நாம் பாதங்களின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மாதத்தில் இரண்டு நாட்களிலாவது பாதங்களை மசாஜ் செய்து விடுங்கள். ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில் முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக வெந்நீர் பரப்பி அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு இரண்டு பாதங்களையும் வைத்து கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு இறந்து போன சரும செல்கள் உதிர்ந்து பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.

  நகங்கள் உடைந்து வெடிப்பும் கீறலுமாக இருந்தால் வாரம் ஒரு முறை, அரைகப் காய்ச்சி ஆறிய பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு குழைத்து காட்டன் பட்ஸில் தோய்த்து கால் விரல்களின் நகங்களின் மீது பூசி வரவும். இப்படி செய்து வந்தால், ரோஜா இதழ் போன்ற அழகு விரல்கள் அமைவது நிச்சயம். நகங்களை சதுர வடிவிலும் ஓரங்களை வட்ட வடிவிலும் வெட்டுவது தான் சரியான முறை. அப்போது தான் நகங்களில் இடுக்கில் மண் புகுந்து கொள்ளாது.

  க்ரீம் செய்யும் விதம்

  cream

  உருளைக்கிழங்கு ஜூஸ்1/2கப்
  எலுமிச்சைச் சாறு 1/4கப்
  காய்ச்சி ஆறிய பால் 1/4கப்
  பார்லி பவுடர் -3டீஸ்பூன்
  இவை அனைத்தையும் கலந்து கால்களில் பூசி 20நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் மிருதுவான பாதங்கள் பொன் போன்று மின்னும். 

  காலை கீழே ஊன்ற முடியாத அளவுக்கு பித்த வெடிப்பு தொல்லையா?
  50கிராம் வெள்ளை எள்ளையும், 50கிராம் கசகசாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் மிக்சியில் போட்டு நைஸாகத் தூள் பண்ணிக் கொள்ளவும். அந்தப் பொடியுடன் 200மிலி நல்லெண்ணெய் கலந்து , கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி காலையும் மாலையும் தடவி வந்தால் கூடிய விரைவில் பித்தவெடிப்பு `டாடா’ சொல்லி விடும்.