“சரி வீட்ல இருக்கும்போது ‘அந்த’ வேலையாவது பாக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்பு ”  ஆணுறை தயாரிப்பை முடக்கிய கொரானா ..

  0
  2
  condoms

  கொரானா வைரஸ் தொற்று உலகத்தையே முடக்கி வைத்துள்ளது. பல தொழில்கள் ,வியாபாரங்கள் முடங்கியதால் மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர் ,இந்நிலையில் கொரானா வைரஸ் மலேசியாவில் பெருமளவு பரவியுள்ளதால் அங்கு உற்பத்தியாகும் ஆணுறை தயாரிக்கும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது .இதனால் நாட்டில் ஆணுறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  condom manufacture

  மலேசியாவில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 2,320 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அது மேலும் பரவாமலிருக்க மலேசிய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் உலகளவில் ஒவ்வொரு ஐந்து ஆணுறைகளில் ஒன்றை உருவாக்கும் மலேசிய நிறுவனமான கரேக்ஸ் ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த நாட்டில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் இருந்து ஒரு ஆணுறை கூட உற்பத்தி செய்யவில்லை.

  condoms 89

  உலக சந்தையில் ஏற்கனவே 100 மில்லியன் ஆணுறைகளின் பற்றாக்குறை உள்ளது. பொதுவாக டூரெக்ஸ் பிராண்டுதான்  சர்வதேச அளவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கரேக்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஆணுறைகளை உற்பத்தி செய்து 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  பல நாட்டு எல்லைகள் மூடப்பட்டு, பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், ஆணுறை தயாரிக்கும் நிறுவனத்தின் ஆணுறை ஏற்றுமதி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் ஆணுறைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.